காதல் பொக்கிஷம்

காதல் பொக்கிஷம் 🌹

கண்களால் கவிதை சொல்லும் காவிய நாயகியே!
என் நெஞ்சை அள்ளும் அழகு தேவதையே!
இதயத்தில் காதல் என்னும் அம்பை ஆழமாக செலுத்திய
இதயக்கனியே!
மனம் என்னும் கொலுமண்டபதில் அழகாக நடணம் ஆடும்
வண்ண மயிலே!
இதய சிம்மாசனத்தில் அலங்காரமாய் அமர்ந்து ஆட்சி புரியும்
இதய ராணியே!
கனவில் வந்து காதல் கனி ரசம் பொழியும் சொப்பன சுந்தரியே!
என்னை உன் கரங்களால் ஆரத்தழுவிய ஆக பெரிய பேரதிசியமே!
என் உயிரோடு உயிராக கலக்க போகும் உண்ணதமே!
இனி வரும் நாளில் என் நெஞ்சில் வைத்து பாதுகாக்க போகும் என் காதல் பொக்கிஷமே!

- பாலு.

எழுதியவர் : பாலு (23-Jul-19, 10:47 pm)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal pokkisham
பார்வை : 338

மேலே