யாதுமாகி நின்றாய்
தத்தி தத்தி தங்க ரதம் வருது
அள்ளி அள்ளி முத்த மழை பொழியுது
உன் முத்துப்பல் சிரிப்பில்
சிதறி சிதறி மனம் எங்கோ பறக்குது
நீ அழுதா மட்டும் இதயம் ஏனோ நிற்குது
உன் அருகே இருந்தா மட்டும் என் உலகம் சுத்துது
விலகி சென்றால் என் வானம் ஏனோ கருக்குது !!