பழகுதல் கூட புதுமையே
இனிமையான வாழ்விலே
இளமை காலம் இன்பமே
இடர்கள் பல வருவிணும்
இயன்று களைதல் சுலபமே
படித்தல் எல்லாம் மகிழ்ச்சியே
பழகுதல் கூட புதுமையே
பண்பில் மாற்றம் வருவதும்
படிப்படியாய் நம்மை மாற்றுமே
அண்மை விலங்கின் பண்பிலும்
அறத்தைக் காண ஆவல் ஏற்படும்
செழித்த அறிவர் கூற்றெல்லாம்
சிந்தனையை மாற்றி காட்டுமே
ஆடவர் பெண்டிர் பாகெல்லாம்
அறவே இங்கு அருகுமே
சாதி பிரிவு கோட்பாடு
சறுகாய் சுருண்டு ஓடுமே
அன்பு அனைவரையும் ஆளுமே
ஆற்றலால் அறிவு பெருகுமே
இதயம் இனியதை தேடுமே
ஈந்தே மனமும் குளிருமே
---- நன்னாடன்.