நிலவும் அவளும்
பிறைநிலைவாய் மூன்றாம் பிறையில்
நிலவே உனைப்பார்க்க நீ
சேலையின் தலைப்பில் தன் அழகு
முகத்தை பாதி மறைத்துவைத்து சிரிக்கும்
என் காதலிபோல் நீயும் அழகே நிலவே
பௌர்ணமி நிலவாய் உன் அழகின்
முழுப்பொழிவில் நீயோ நிலவே
என் காதலியின் ஒளிரும் முழு
முகமாகவே காட்சி தருகின்றாய்
இன்று நீல வானில் தூரத்தில் எங்கோ
சில தாரகைகள் சிரிக்கும் மத்தாப்புக்களைப்போல்
இருக்க வானம் இருண்டதைக் காண்கின்றேன்
நீ இல்லை வானில் வான் இருண்டது
என்னைக் காண என்னவளும் வரவில்லை
இருண்டது என் மனம் இன்று