பொய்யான கோபம்

குத்தும் குளவி என்றா சொன்னேன் ?
ஏனம்மா என் மீது இந்தக் கோபம்
அழகி என்று தானே சொன்னேன்
உண்மையை உண்மையாய்
சொல்லக் கூடாதா ?
சங்கோஜம் காட்டும்
விழிகள் பொய்யாய்
ஆனால் எனக்குத் தெரியும்
சந்தோசம் அங்கே
ஒளிவில் மெய்யாய்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Sep-19, 4:29 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : poiyaana kopam
பார்வை : 240

மேலே