சொல் விதைச்ச மச்சான்
புல் அறுக்கப் போகும் போதும்
நெல் அறுக்கப் போகும் போதும்
மெது மெதுவாக நெஞ்சினிலே
சொல் விதைத்தான் மெது
மெதுவாக எனை அணைத்தான் .../
எரிக்க தோப்போரம் குறுக்க
வந்து வழி மறைச்சான்
உரக்கக் குரல் கொடுப்பேன்
என்றதுமே நெருங்கி வந்து
வாயடைச்சான் ...../
சின்னச் சின்ன சொல்
விதைச்சான்
சிவந்த புள்ள முகத்தினிலே
வெட்கத்தை வரவழைச்சான்....../
கக்கத்தில் வச்ச குடம் கை
நழுவுவது தெரியாத வாறு
கற்பனையில் மிதக்க வச்சான்
எத்தனையோ சொற்களை
காது வழியே போட்டு வச்சான் ...../
ஏதேதோ எண்ணம் கொடுத்து
உள்ளத்திலே வலை விரிச்சான்
இறுதியில் சொல் அறுத்து
வாழ்க்கை இல்லையென்று கை விரிச்சான் ...../