தொடக்கம்
கைநிறையக் காசிருந்தால்
கண்ணிரண்டும் தெரிவதில்லை,
முன்னாலே நின்றாலும்
முகம்கூட மறந்துவிடும்,
பொல்லாத காலமடா
பொய்போடும் வேடமடா..
கையிருப்பு காலியாகி
கடன்காரனாகி
நடுரோட்டில் கடும்வெயிலில்
கொடும்பசியில்
கால்நடையாய் நடக்கும்போது
தொடங்குதடா-
ஞானம்...!