வணங்குகிறேன்_தாயே

வணங்குகிறேன்_தாயே
********************

பாசத்தின் மலர்ச்சுடரே
--- பார்போற்றும் தூயவளே
பல்கிப் பெருகிவிடும்
___பாசமும் அரவணைப்புமே
உந்தன் கரங்களில்
---உமியளவும் உதிரவில்லையே
பாடுகளை மேலேற்றி
__பாசமாகும் கருணையே
பணிந்து வணங்கிவிடவே
___பாவியான மனமுமே
பற்றும் கொண்டே .
__பரிதவிர்த்து நிற்கிறதே
பட்டினியை புதைத்துவிட்டு
___பத்திரமாய் வாழ்ந்தே
பாசச் சோற்றை
__பக்குவமாய் தந்தே
பாரினிலே வாழும்
__பந்தத்தின் அன்னையே
படிப்பில் அறியாத
__ பலதையும் அறிந்தேனே
பாசமான வீட்டில்
--பந்தலான மகிழ்விலே
பண்பான வாழ்வும்
---படரும் கொடியாக
பன்னீர் சிந்தும்
--பற்றுகள் தரவே
பாசமான தேனை
--பருகிடவே தாயே
பணிந்து வணங்கி
---உருகியே இங்கு
நெஞ்சம் கனக்குது
_உன்னை காத்திடவே
கவி அகிலன் ராஜா

அகிலன் ராஜா

எழுதியவர் : (12-Sep-19, 10:36 am)
பார்வை : 61

மேலே