வாழ்க்கை ஒரு போராட்டக்களம் 555
வாழ்க்கை...
காதல் கடந்து செல்லும்
பருவ வயதில்...
காதல் மட்டுமே வாழ்க்கை என்ற
எண்ணம் நம்மில் பலருக்கு...
வாழ்க்கை கடலில்
இருக்கும் முத்துப்போல...
மூச்சடக்கி கடலில் இறங்கி
ஏறுபவனுக்கே முத்துக்கள் கிடைக்கும்...
கரையில் நிற்பவனுக்கு
கரை ஒதுங்கிய...
கிளிஞ்சல்கள்
மட்டுமே கிடைக்கும்...
காதலும் கிளிஞ்சல்போல்
காதலே வாழ்க்கை இல்லை...
வாழ்க்கை கடலில் நீ
தவறவிட்ட நீர்த்துளிபோல்...
எளிதாக
கிடைத்துவிடாது இன்பம்...
தடைகள் தாண்டி
நீ முன்னேறு...
உனக்கு விலைமதிப்பில்லா
முத்துக்கள் கிடைக்கும்...
வாழ்க்கை
சிறுபுள்ளி அல்ல...
சிலவலிகளோடு
முடிந்துவிட தொடர்கோடு...
நீயும் தடைகள் தாண்டி
ஓடிக்கொண்டே இரு...
உனக்கும்
கிடைக்கும் முத்துக்கள்...
வாழ்க்கை போராட்டக்களம்
அதில் நீயும் ஒருவீரன்...
என் தோழா.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
