வருவாய் தருவாய்
வருவாய் தருவாய்
கனவாய் வருவாய்
காதலைத் தருவாய்
துடிப்பாய் நடிப்பாய்
உதட்டில் இனிப்பாய்
வருவாய் தருவாய்
திருவாய் மலர்வாய்
களிப்பாய் சிரிப்பாய்
கவர்வாய் எனையே!
துவள்வாய் மெதுவாய்
துடியிடை நெளிவாய்
விழிப்பாய் உணர்வாய்
விரைவாய் அறிவாய்
ஒளிர்வாய் மிளிர்வாய்
ஓவியம் எழிலாய்
அழைக்கும் விழியால்
அணைப்பாய் எனையே!
கொடுப்பாய் எடுப்பாய்
கோமகள் வடிவாய்
உணர்வாய் இருப்பாய்
உடலாய் உயிராய்!