நம்பிக்கை கொள்

குனிந்து வாழாதே
கும்பிடு போடாதே
பணிந்து வந்து கூட
பழிகள் சொல்லாதே
நடக்கின்ற தூரம் வெகு தூரம்
உன் கால்களை கட்டாதே
கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும்
நீ கண்ணீர் சிந்தாதே
வழியெங்கும் முல்லு கல்லு மேடு நீ
வலிகளை தாங்கி ஓடு ஓடு
காலங்கள் இங்கே காணாமல் போகும்
காயங்கள் பட்டால் வரலாறாய் மாறும்
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாரு
தமிழர்களின் வீரம் பலநூறு
வாழ்வது ஒரு வாட்டி
வாழனும் சீராட்டி
வாழ்த்தட்டும் தலைமுறை பல வாட்டி

எழுதியவர் : த வே தமிழன்பன் (6-Oct-19, 6:02 pm)
Tanglish : nambikkai kol
பார்வை : 1956

மேலே