ரகசியம்

காலம் கடந்தும் கணிக்க
முடியவில்லையாம்

உன் புன்னகையின் மர்மம்
என்

காதில் மட்டும் சொல்லிவிடு

அந்த ரகசியம் நான் காப்பேன்..,

இதுவரை யாரும் என்னை
கேட்கவில்லை

இந்த கேள்வி எனக்கொன்றும்
புதிதுமில்லை

மாதிரியாய் அவன் முன்
நான் நின்றேன்

என்னை பார்த்துப் பார்த்து
வரைந்தபின்

நான் பார்த்தேன் பார்த்தப்
பின்

எனக்குள்ளே வந்த கேள்வி

சிரிக்காது அல்லவா நான்
நின்றேன்

இந்த சிரிப்பு எப்படி என்று
நான் கேட்க

உன் உதடுகள் சுளுக்கினால்
இப்படிதான்

இருப்பாய் என்று அவன்
சொன்னான்

மெல்லிய முத்தம் ஒன்று
பதித்துவிட்டு

நான் வந்தேன் அன்றைக்கு
தெரியாது இது

விவாதப் பொருள் ஆகுமென்று ஆனாலும்

அன்றைக்கே பெற்றுவிட்டான்
என்னிடமிருந்து பரிசை

என்னை வரைந்த ஓவியன்
இன்றளவும்

பேசுவது அவனுக்கு நீங்கள் தரும்
பரிசு..,

எழுதியவர் : நா.சேகர் (8-Oct-19, 2:41 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyam
பார்வை : 1158

மேலே