மருத்துவ வெண்பா - வெள்ளாட்டுப் பால் - பாடல் 8

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா:

வெள்ளாட்டுப் பாலுக்கு மேவியநற் றீபனமாந்
தள்ளாடு வாதபித்தஞ் சாந்தமாம் – உள்ளிரைப்புச்
சீதமதி சாரஞ் சிலேஷ்மமறும்; புண்ணாறும்
வாதகி லேசமும்போ மாய்ந்து.

பொருள்:

வெள்ளாட்டுப்பால் ஒரு நல்ல ஆகாரமாகச் சொல்லப்படுகிறது.

வாதபித்தம் குறைகிறது. நுரையீரல் சம்பந்தப்பட்ட இரைப்பு, சீதங் கலந்த பேதி, இருமல் சளி அற்றுப் போய்விடும்.

புண்கள் ஆறும். வாதத்தால் ஏற்படும் வலி, வீக்கம் போய்விடும் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-19, 9:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

மேலே