மனிதன் மறக்கவில்லை ...

ஓர் அதிகாலை

தெருவில் ஒரே

கூச்சல் !

குழப்பம் !

இப்படியாகிப்போச்சே ?

பெண்கள் கூட்டம் ஆங்காங்கே !

வேக வேகமாக செல்லும்

ஆண்கள் !

யாரும் தொழிலுக்கு செல்லக்கூடாது !

நாம் தான் செய்தாக வேண்டும்

இளைஞர் கூட்டம் !

என்னவாக இருக்கும் ?

அடுத்த தெருவில்

ஒருவர் மரணம் !

வயது அறுபதுக்கு மேல் இருக்கும்

மனிதன் மறக்கவில்லை

மனிதாபிமானத்தை !

இன்றும் கிராமங்களில் !!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (10-Sep-11, 11:55 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 335

மேலே