ஏமாற்றக் கவிதை - 10  

ஏமாற்றக் கவிதை - 10  
====================

புத்தாண்டு கொண்டாட்டம் இடையே
பத்தாண்டுக்கு முன்னால் ஒரு நாள்..
சத்தாக என்னில் சேர்ந்து கொண்டாய்
வித்தகியே இன்று எங்கு சென்றாய்?

பொங்கல் கரும்பு நீயென்பேன்
எங்கள் திருவிழாவின் தேவி என்பேன்..
அங்கம் தேனென நான் நினைக்க‌
தங்கம் நீயென தூரம் சென்றாய்!

ஹோலிப் பண்டிகை கொண்டாடினாய்
கேலியாய் என்னை சீண்டிச் சென்றாய்..
கல்லூரி விட்ட போது சிரிந்திருந்தேன்
ஏமாற்றி விட்ட போது என்னசெய்வேன்?

ரக்ஷா பந்தன் எனச்சொல்லி
என்னைத் தேடி என் அறைவந்தாய்..
ராக்கி என் நண்பனுக்கு கட்டிவிட்டு
அரக்கி நீ சென்றது ஞாபகக்கூட்டில்!

இந்திய சுதந்திர தினத்தன்று
உன்னுடன் பேசும் சுதந்திரம் இழந்தேன்..
கருப்பு கொடி ஒன்று எனைச்சுற்றி
குத்திக்கொள் எனை என்று மிரட்டுதடி!

ஆயுத பூஜை செய்தேனென்று
என் மிதிவண்டிக்கும் சந்தனம் வைத்தாய்..
சிறிதும் பிரிக்கா என் புத்தகத்தை
பூஜித்துத் தந்தாயே உன்னிதயம் மறந்தாயோ!

காந்திஜி பிறந்த தேசமடி
அஹிம்சை வழியில் நான் போராடுவேன்..
மன‌தின் துரோக வெள்ளையனை வெளியேற்று
நம் காதல் தேசத்தில் கொடியேற்று!

தீபாவளி பட்டிமன்ற கருப்பொருளாய்
நம் பிரிவு விவாதம் ஆனதிங்கே..
இரு தீபாவளி பார்த்தாச்சு நீபிரிஞ்சு
தாங்கும் சக்தியும் போயாச்சு எனப்பிரிஞ்சு!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Oct-19, 5:59 am)
பார்வை : 466

மேலே