தரையில் ஒரு தீவு

கருவறைகள் சுமந்திட்ட
எழில்மிகு கோபுரங்கொள்
கோவிலினுள் நுழைந்துவிட்டேனோ!
சுற்றும் முற்றும் சிலைகள்
மௌனமாய் எம் முன்னோர்கள்
சாரைக்காற்றில் சலசலக்கிறது
உயர்ந்து நிற்கும் மரங்கள்....!

அமைதியை விழுங்கிட்ட
காரியம் முடிந்த இழவுச் சடங்கின்
சுடலையில் நுழைந்துவிட்டேனோ!
சுற்றும் முற்றும் இருள்கள்
மறைந்துவிட்ட மக்கள் இரைச்சல்கள்
வெங்காற்றில் உலுக்கிறது முட்கள்
பரந்து விரிந்த உடை மரங்கள்....!

வெண்போர்வை போர்த்திட்ட
நிலங்கள் எங்கும் நீர்க்கோலங்கள்
அதன் நடுவில் நுழைந்திட்ட நுணல்கள் தரையைத் தேடும்
நிகழ்வாய் எங்கள் ஊர் தரையில் ஒரு தீவு....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (2-Nov-19, 10:59 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 256

மேலே