மடிசுகம்

தன்மடி மீது குழந்தையாய் அமரவைத்து
பலதும் சொல்லித்தந்த அம்மா

மீண்டும் மீண்டும் மடிசுகம் தேடும்
என்பதை ஏன்சொல்ல மறந்தாள்

தலைவலிக்கு கூட மருந்தாய் மடிதேடுகிறதே

எழுதியவர் : நா.சேகர் (17-Nov-19, 9:26 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 744

மேலே