இரவின் பெற்றிமை
உஇரவின் பெற்றிமை
ஆதவன் காணா புவியின் பரப்பில்
நிகழும் இரவின் பிறப்பு!
மாதவன் கரியநிறத்து சிறப்புடன்
கழிக்கும் இரவு தன் இருப்பு!
சூரியன் பூட்டி வைத்த
வெளிச்சப் பூட்டு உடைந்து
விண்மீன் கூட்டத்திற்கு
இரவால் நிகழும் திறப்பு!
உழைத்து களைத்தவரை
இழுத்து அமர்த்தி
உறக்கத்தில் ஆழ்த்தலும்
களைப்பைத் துரத்தலும்
இரவின் தலையாய பொறுப்பு!
அல்லி மல்லி மலர்கள் மலர்த்தி
நல் மணம் கமழச்செய்வது இரவின் முதன்மை விருப்பு!
புவியைக் குளுமை ஆக்கி
நாள்தனை முழுமை ஆக்கும்
இரவு எனும் இனிய பொழுதது கழியும் ஒவ்வொருநாளின்
தனித்த சிறப்பு!