நிலவன் உலா

நிலவும் நீரும்:-
குளிர்வெண்குடை மன்னவன்,
காரிருள் கண்டிட
கதிரவன் செய்த கண்ணவன்,
வில்லுரு கொண்டவன் அவனொ!
வீதியுலா போகும்வழி
எழில்கொண்ட பெண்நதியை
விழிகொண்டு மயக்கிய
மதியெனும் மன்னவன்
நதியோடு நீராட
நதியோடு விதிவிளையாட...

இரவு காலம்
ஈரக் காற்று
இணைகள் சேரும்
இன்ப ஊற்று
உறவின் பாலம்
உணர்வை இணைக்க
உயிரியல் மூலமே
களவியல் ஞாலம் -எனக்
கண்ட பெண்நதியின்
காமலீலைஐ! கேளாயோஓ!

ஓடும் நதியோ! துள்ளல்
அலையால் இசைத்து
துணையான்(ழ்)தனை மீட்டி
துதியொன் றினையேற்றி
மதிதன் நிலையிழந்து
மயக்கத்தில் தனைமறந்து
தலைவன் சென்றதெங் கென்று
அறியா அவலை நிலையில்
துடித்த பெண்நதியும்
தேடல் கேள்விதனை
பாவைப்பார்வைப் பொருளாம்
கயலிடமே
தொடங்கியதே!

என் உல்லாசச் சுருதியில்
சுககானம் எனநினைத்து
தனையே மறந்து
தூங்கிய கயலினமே
கார்துறவி காலைதனில்
கதிரவன்ன் கதிரெழா
காலந்தனில்
கண்டாயோ என்னவனை....
காரிருள் மன்னவனை....

எழுதியவர் : கல்லறை செல்வன் (18-Nov-19, 2:06 pm)
பார்வை : 258

மேலே