விள்ளா அறிஞர் போற்றுதல் வேண்டாரே – நன்னெறி 33

நேரிசை வெண்பா

எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக்
கரைகாப்(பு) உளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்(பு) உளதோ கடல். 33 - நன்னெறி

பொருள்:

நாம் கட்டும் குளத்திற்கு நீர் தளும்பாது இருக்க கரை கட்டுகிறோம். ஆனால் கடலுக்குக் கரை கட்டுவதில்லை.

அதுபோல நம்மை தூற்றாதிருப்பதற்காக இழிந்தவர்களைப் போற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், குறைவற்ற அறிவுடையோருக்கு அந்த போற்றுதல் தேவையில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 4:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே