அகப் பயணம்

சக்கரங்களால்
சுழல்கிறது வாழ்க்கை
இருசக்கரமாய்
நான்கு சக்கரமாய்
அவரவர் வசதியைப் பொறுத்து..
எரிபொருளால்
புறப்பயணம் தினமும்
கருப்பொருளால்
அகப்பயணம்
மேற்கொள்வோம் தினமும்
ஏழு சக்கரம் உணர்வோம்
அகமும் சிறப்பும்
புறமும் சிறக்கும்
அனைத்தும் சிறக்கும்.