இயற்கை
நிலைக் கண்ணாடியில்
என் முகத்தைப் பார்த்து
முன்னே முகத்தில் விழும்
தலை மயிரை சீப்பால்
சரி செய்து மீண்டும் ஒரு முறை
என் அழகை நானே ரசித்து
அதோ என்னவளை பார்க்க
உடம்பெல்லாம் ஆனந்தம் பொங்க
கிளம்பினேன்.....
வாசலில் வந்த நான்
வீட்டு பின்
தோட்டத்தில் ஏதோ
ஓசை கேட்க அங்கு சென்றேன்
உச்சி பகல் வேளை
வெய்யோன் தலைக்கு மேலே
கிணற்றடிக்கு சென்றேன்
கிணற்றை எட்டிப் பார்த்தேன்
தெளிந்த நீர் தெலும்பல் ஏதும் இல்லை
கண்ணாடிபோல் காட்சி தந்தது கிணற்று நீர்
அதில் நீல வானம் காயும் வெய்யோனும்
தெரிந்தான் , இன்னும் சூழும் மேகத்திட்டும்
பகலில் காணா கோடான கோடி தாரகையும் !
அதில் என் முகத்தையும் கண்டேன்
இயற்கை இப்படி நமக்கென அமைத்து தந்த
உருவமெல்லாம் காட்டும் கண்ணாடி
இந்த திறந்திருக்கும் கிணற்றின் நீர்
என்னழகையே நிலைக்கண்ணாடியில்
பார்த்து ரசித்த நான்.......
இந்த இயற்கையின் கண்ணாடியில்
வானுலகைக் கண்டேனே என் முகத்தோடு !
விந்தை தரும் இயற்கை ..... இயற்கையின்
வினோதம் இதுபோல் பல பல