காதல்
வெளியேற்ற வேண்டும் என்ற
தவிப்பு
வெளியேற முடியாது என்ற உன்
மறுப்பு
நீ களவாடி சென்ற என் சிரிப்பு
சிறுமூளையா பெருமூளையா
எந்த மூலையில் நீ
உன்னை வெளியேற்றும் சட்டம்
இயற்றி
நிறைவேற்ற பெரும்பான்மை இருந்தும்
அமல்படுத்த முடியாது தவிக்கின்றேன்
சிறுபான்மை என்று எடைபோட்டது
தவறோ?