நெருப்பு
நெருப்பு
ஒளியோடு வெப்பம் தரும்
அக்னி பந்தாக
புவிமேல் நின்று..
வெளிப்பரப்பு வரை ஆற்றல் தரும்
கனலாக
புவியின் மையத்தின் உள்நின்று..
நமது உணவிற்கு சுவைசேர்க்கும்
தணலாக
நாம் வாழ்வு வாழுகையில்....
நமையே உணவாக்கி சுவை பார்க்கும்
கொள்ளியாக
நம்வாழ்வு நழுவுகையில்....
சிறுதீயாகி ஒளியூட்டி
இருள் முடிக்கும் தீபத்தில்...
எரிமலைக்குழம்பாகிச் சிதறும்
வெடிக்கும் கோபத்தில்...
எப்பக்கம் எத்திசை வைப்பினும்
சுடராக
எரியும் மேலுக்கு...
பூவாகமாறுமாம் தகதகவென்றகங்குலும் பக்திமான்கள்
காலுக்கு...
அழலாய் ஆர்ப்பரிக்கும்
நெருப்பு
காற்றோடு கைகோர்க்கும் வேளை!
நீரோடு வினைபுரிந்தால்
தழலானாலும் தாழ்ந்து
நீறாகிமுடியும்
எரியும் அதன் வேலை!