ஒத்திகை பார்த்து
ஒரே சட்டையை
கசக்கிப் பிழிந்து
மூங்கில் படலில்
உலறவிட்டு...
பரட்டமுடியை
கிராப் வெட்டி
பட்டால வீரனாக
ஒத்திகை பார்த்து ...
அரளிப்பூவையும்
மாங்குலையையும்
மஞ்சப்பையில்
ஈரம் காயமல்
விடிய விடிய
இராணுவ வீரனாய்
கண் விழித்து
பாதுகாத்து ....
பொழுது புலர்ந்ததும்
கதர்வேட்டியில்
தீட்டிய மூவர்ண கொடியை
மூங்கில் கழியில் பறக்கவிட்டு...
தேசபக்தியை நினைவுகூர்ந்த
என் பள்ளிப் பருவம்...
சென்னை காமராஜர்
சாலையில் அணிவகுக்கும்
அலங்கார ஊர்தியை
பார்த்து இரசிக்கும் போது ...
நான் ஏற்றிய
தேசிய கொடியை
பார்த்து கடந்த
வெள்ளாட்டு படையை
நினைத்து நினைத்து
கடந்து வந்தேன்...
அகிம்சை வழியில்
வாழவேண்டும் யென்ற
பொன் மொழி யோடு.