கடற்கரையோரம்
வானங்களில் விண்மீன்கள்
விழித்து எனை பார்க்க
நான் விழித்தேன்
மணல்களில் என் பாதம்
பட பட பட்டென
பாதம் பதித்தேன்
அலைகளின் ஓசை
ஓயாது ஒலிக்க
செவிகள் சாய்த்தேன்
இதமான காற்று
இதயத்தை வருடியது
இதமாய் திருடியது
என் மனம்
கொள்ளை போனது
கடற்கரையோரத்தில்