நான் வீழேன்
கடல் சேராத நதியோ..!!
கரை தொடாத அலையோ..!!
கருவறை தீண்டாமல்
கல்லறை தீண்டிய பூவோ ..!!?
கருவில் தங்கி
உருவாகுமுன்
குருதியில் கறைந்து போன சிசுவோjQuery17107336344012354157_1640997890555
பிறர் பார்வை படாமல் தனிமையில்
துளைந்ந்து போன தீவோ..!!??
நிழல் கொடுத்தும்..
மழை கொடுத்ததும் ,
உயிர் என பாராமல்
வெட்டி சாய்க்கப்பட்ட மரமோ ..!!??
புவி தொடும் மழையாய்
உருமாராமல்
காற்றில் கலைந்து போன
முகிலோ...??
திறன் இருந்தும்
முயற்சி இருந்தும்
வெளிவர முடியாமல்
கால் மிதி பட்டு
மண்ணோடு மண்ணாக
மக்கிய போகும் விதையோ ??
சிவன் ...
அவன் உறங்கையில்
படைக்கப்பட்ட
ஜீவன் இவனோ ??
விதி விளையாடினாலும்
துரதிஷ்டம்
துரத்தினாலும்
சிவனே !!
நான் வீழ்வேன் என
நினைத்தாயோ ??
என்றும் ..என்றென்றும் ..
ஜீவன்✊✊