விவசாயியம்

ஊருக்கெல்லாம் சோறு போட்டான் விவசாயி
அவன்நிலத்தைக் கூரு போட்டதுஇந்த கலிகாலம்
சாப்பிடுவதற்கு வழிதேடி விவசாயம் செய்தான்
வழிக்காக அழித்தார்கள் அவன் விளைநிலத்தை
விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டான் மறுத்தார்கள்
கடவுள் கொடுத்த தண்ணீரை சேமிக்க மறந்தார்கள்
இருந்த நீரையும் தனியாருக்கு கொடுத்தார்கள்
அதன்மூலம் பல விவசாயிகளின் உயிரை எடுத்தார்கள்
விவசாயம் தன்னுடன் முடிந்துவிடுமோ என்று எண்ணி
துவண்டு கிடப்பவனை தொட்டுத்தழுவும் கடவுள் சொல்கிறார்,
உலகிற்கு உணவளிக்கும் உண்ணத பணியை
உனக்கு கொடுத்தேன் எனக்கு இணையானவன் நீ
சோதனையை கொடுப்பவன் நான் அதை
சாதனையாய் மாற்றுபவன் நீ மட்டும் தான்
தோளில் கலப்பையைத் தூக்கி களத்திற்கு செல்
தோள் கொடுக்க வருவார்கள் இன்றய இளஞ்சிங்கங்கள் என்று………..

எழுதியவர் : காசிமணி (25-Apr-20, 1:35 pm)
சேர்த்தது : காசிமணி
பார்வை : 64

மேலே