காதல்
என் காதலியே என்னுள் என்றோ
நீ ராகமாய்ப் புகுந்துவிட்டாய்
என் இதயத்தில்
நான் அநுராகமாய் உன்னையே தொடர்ந்து
உன்னுள் கலந்துவிட்டேனடி கண்ணம்மா
என்னுள் உன்னை உன்னில் என்னையும்
காணும் விநோதமானதையடி நீ
'ராகத்தில் அநுராகம் ' என்முன்னே
நீயும் நானுமாய்
ஆகாய பந்தலில் ஊஞ்சலாட