தொழிலாளி முடக்கம்

jQuery17104241847128700913_1589659353124? தொழிலாளி முடக்கம் jQuery17104547665136355794_1590129474597?

கனவு இந்தியாவே பொடிநடையாய் போகிறதே,
ஆட்சிப்பீடம் அலங்கரித்து கைகெட்டி சிரிக்கிறதே,

வீதியோர மானிடரின் பசிதீர வழியில்லையே,,
மாடமனிதருக்கு சலுகை மட்டும் தந்ததேனோ?

நடையறியா பச்சிளம் பொடிநடையாய் போயிடவே,,
பறந்துவந்து ஆகாயப் பூமழை பொழிவதேனோ?

பசியாற வழியில்லையென பரிதவித்து சாகும்போது,
சால்வை கவசம்மிட்டு நன்றிமட்டும் சொல்வதேனோ?

அடுப்பு எரிய வழிகளற்ற நாட்கள்தானே,
வீதி முழுக்க தீபத்தால் நன்றியேனோ?

லட்சம்கோடி அறிவிப்பு தந்த போது,
ஏழையின் வயிறை கான மறந்ததேனோ??

ஆட்சியாளர் கள்ளமௌனியாய் நிற்பதாலே
தீருமோ அவலநிலை பசியாறுமோ கடைநிலை?

ஆயிரம் ஆயிரம் கேள்விமட்டும் உண்டிங்கு,
பதில்கள் மட்டும் கேள்விக்குறி ஆனதேனோ???

உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (17-May-20, 1:30 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 183

மேலே