காணவரம்

காணவரம்
உன்னை எண்ணி எண்ணி மாய்கின்றேன்
கன நொடிப்பொழுதில் ஏனோ மறைகின்றாய்,
மறுகனமே நினைவில் பிம்பமாய் நின்றாயே !!!
தத்தம் தவிப்புதனில் நினைப்பு விசும்பிடவே,
நினைவற்று மறுகி மறுகி காணவந்தேன்,
கடைக்கண் கூட இறக்கமற்று போனதேனோ !!!
நீன்ட நேர விழிஏக்கத்தின் வலிதனிலே,
இமையறியா கண் அயர்ந்து போனேனே,
கனவிலும் ஏனோ காணவரம் தந்தாய் !!!
உன்நினைவாய்
தௌபீஃக்