புதிய வசந்தம்

ஒத்தை ரோஜாச் செடியில்
சத்தான பல பூக்கள்
கொத்துக்கொத்தாகப்
பூத்து புன்னகைக்கின்றது

குங்குமப்பூ நிறத்தில்
குனிந்த தலை நிமிராமல்
குவளை குவளையாய்
குலுங்கியே குதூகலிக்கின்றது

பார்த்து வியக்கும் விழிகள்
பண்ணிய புண்ணியம் என்னவோ?
கோர்வையாய் பூத்த பூக்கள்
பார்க்கையில் மனதை மயக்கும்

அழகான மணித்துளிகள்
அமைதியாய் ரசிக்கின்றேன்
அந்த மணித்துளிகளில்
என்னையே மறக்கின்றேன்

குளிர் பிரதேசத்தின் வசந்தகாலம்
குஷியான பூக்களுக்கோ வரப்பிரசாதம்
நீடித்த ஆயுள் இவைக்கு இருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்து இருக்கும்!

மாதங்கள் மூன்றின் அழகான கோடையில்
ஏங்கிக்காத்திருந்த அனைவரையும்
பார்த்து பூரிக்க வைக்கும்
பிரான்ஸ் தேசத்தின் புதிய வசந்தம் இது.

எழுதியவர் : ரஞ்ஜினி (20-May-20, 2:16 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : puthiya vasantham
பார்வை : 195

மேலே