நகைச்சுவை துணுக்குகள்
எல்லார் கல்யாணமும் சொர்க்கத்தலே தான் நிச்சயப் படுத்தப் படறதாக வழக்கு. நீ என்னமோ உன் கல்யாணம் மாத்திரம் ஸ்பெஷலா சொர்க்கத்துலே நிச்சயம் செய்ததாகச் சொல்றே.
என் கல்யாணம் நிச்சயமான இடம் ஹோட்டல் சொர்க்கம்.
ஆனா இனிமே தான் தெரியணும் அது நிஜமாவே சொர்க்கமா இல்லை நரகமான்னு
**********
வயதானவர்: அந்த லேகியம் ஒரு சின்ன பாட்டில் கொடு அப்பா.
கடைக்காரர்: இந்த லேகியத்துக்கு டிமாண்ட் நிறைய இருக்கு சார். கிடைக்கிறது கஷ்டம். பெரிய பாட்டிலா வாங்கிக்கங்க . ரொம்ப நாளைக்கு வரும்.
வயதானவர்: நான் அத்தனை நாள் இருக்கணுமே அப்பா.
***********
யாரோ உங்களை முட்டிக் கீழே தள்ளிட்டாங்கன்னு சொன்னாங்களே. யார் அது?
எல்லாம் என் மாட்டுப் பொண்ணுதான்.
****************
நான் என்ன சிகிச்சை கொடுத்தாலும் நோயாளி பிழைக்கிறதும் பிழைக்காம இருக்கிறதும் ஆண்டவன் கையிலேதான் இருக்குன்னு சொல்லிட்டு சிகிச்சைக்கான பணத்தை மட்டும் இவர் வாங்கிக்கிறாரே. அது நியாயமா?
***************
போஸ்டர் அடிச்சுலே தப்பு நடந்து போச்சு. தலைவர் என்ன சொல்லுவாறோன்னு பயமா இருக்கு.
அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை. இப்பத்தான் தலைவர் கிட்டே நீ அடிச்ச அந்தப் போஸ்டரைக் காண்பிச்சேன். அவருக்கு ஒரே சந்தோஷமாப் போச்சு. சங்கத் தலைவர்னு அடிக்கிறதுக்குப் பதிலா தங்கத் தலைவர்னு நீ அடிச்சது அவரை ரொம்பப் பெருமைப் படுத்தறமாதிரி இருக்குன்னு சொல்லி உனக்கு ஒரு 500 ரூபாய் அதிகமா கொடுக்கச் சொல்லி என் கிட்டே கொடுத்து அனுப்பியிருக்கார்.
**************
நம்ம ஊர் எம்.எல்.ஏ. உடல்நிலை ரொம்பவும் மோசமா இருக்காம். பிழைக்கிறதே கஷ்டம்னு சொல்றாங்க. ஊர் ஜனஙகளெல்லாம் ஒரே சந்தோஷத்திலே இருக்காங்க.
ஏன்?
அவர் இறந்தா இடைத்தேர்தல் வருமில்லை. அதை நினைச்சு சந்தோஷப் படறாங்க.
***********