இப்படியும் சில, சிலர்
மாமரத்தைப் பார்
வடுவாய், காயாய்
சுவைமிகு பழமாய்
தோரணத்திற்கு இலை
தீய்க்கும் வெய்யலில்
வழிப்போக்கருக்கு நிழல்தரும் மரமாய்
என்று இவை எல்லாம்
தரும் மாமரம் அதன்
காய்களின் சுவை அறியாது-தன்
பழங்களின் இனிமை அறியாது
தனக்கென்று வாழ்வில் எதையும்
வைத்துகொளாது பிறருக்காகவே வாழும்
மனிதரில் தியாகிகள்போல்
மாமரத்தை தன் சுயநலனுக்காக வெட்டிசாய்க்கும்
மனிதன் இதை ஒரு முறையேனும் யோசித்தது உண்டா
வெறியில் தியாகிகளை க்ரூரமாய்த் தாக்கி
வீழ்த்தும் வெறியர்கள் ........
தனக்கென ஒன்றும் வைத்துக்கொளாத
மரங்கள், சில மனிதர்கள்