நான்டா கண்டா

ஏன்டா பாரி 'நான்டா' எங்கடா?
#@@@@
நான்டாவா?
@@@@##
'கண்டா' எங்கடா?
@@@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@
நீதான்டா சொன்ன. ஆங்கில 'ஐ:க்கு ரண்டு அர்த்தம் இருக்குதுன்னு?
@@@@##
ஆமாம். நாஞ் சொன்னது உம் மேல சத்தியமா உண்மைதாம்மா. ஒரெழுத்து 'ஐ' (i) க்கு 'நான்:ன்னு அர்த்தம். மூணெழுத்து :ஐ' (eye)-க்கு 'கண்'ன்னு அர்த்தம்.
@@@@@@
நானும் அத்தான்டா சொன்னேன்.
@##@#####
நான் இல்லன்னு சொல்லலையே.
@@@@##
அப்பறம் ஏன்டா நாங் கேட்ட ரண்டு கேள்விக்கும் நீ பதில் சொல்லல?
###########
நாந் தான் சொன்னேன். ரண்டு அர்த்த்தையும்.
@@@###
அதவச்சுத்தான்டா "'நான்டா' எங்க? "'கண்டா' எங்க?"ன்னு கேட்டேன்.
@@@@@@
நீ என்னக் கொழப்பறம்மா?
@@@@@@@@
ஒரு கொழப்பமும் இல்ல. நீ படிச்சவன். நாங் கேட்டது உனக்குப் புரில
@@@@@@@
'நான்டா' எங்க? 'கண்டா' எங்க?
#@@@@@#
என்னம்மா பித்தம் தலைக்கு ஏறிடுச்சா?
@@@@@@
உனக்குத்தான்டா பித்து பிடிச்சுப் போச்சு. மகளுக்கு ரண்டு அர்த்தம் உள்ள பேரை வைக்கத் தெரியுது. அவ எங்கன்னு கேட்ட ஒண்ணும் புரியல. என்ன பேருடா அது? தமிழ்ல இல்லாத பேரு.
@@@@@@
ஓ.... உங்க பேத்தி 'ஐடா'வை எங்கன்னு கேக்கறியா?
@@@@@@|
இப்பத்தான் இந்த வாழமட்டை ஆசிரியர் பையனுக்குப் புரிஞ்சிருக்கு?
@@@#####
எல்லாம் பெத்த பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறாங்களேன்னு என் மகளுக்கு வெளிநாட்டுப் பேரை வச்சுட்டேன். ஊரில எல்லாம் "உங்க பொண்ணுக்கு அருமையான பேரு வச்சிருக்கிறீங்க"ன்னு என்னைப் பாராட்டறாங்க அம்மா.
@@####
ஆமாம்டா பாராட்டுவாங்கடா. தமிழ்ப் பேரைத் தவிர வேற எந்த மொழிப் பேரை வச்சாலும் "ச்ச்சுவீட்டு நேமு"-ன்னு பாராட்டாறதுதானே நம்ம தமிழரோட வழக்கம்.
■■■■■■■■■■■■■■■■◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Ida = diligent, industrious. Norwegian, German, Portuguese, English, & Indian origin.

எழுதியவர் : மலர் (13-Jun-20, 7:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 45

மேலே