61 இன்மொழியால் அறம் உரைத்து ஈடேற்றுபவன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 8

கலித்துறை
(புளிமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
('ய்' ஆசிடையிட்ட எதுகை)

கைத்திட்டம ருந்திலக் காரங்க லந்து கூட்டி
மத்தித்தருள் பண்டிதர் போன்மற நோய்த விர்ப்பான்
எத்திக்கினுங் கேட்பவர் காதுள மின்ப மேவித்
தித்தித்திட ஆரியர் நன்மறை செப்பு வாரே. 8

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மருத்துவர் கசப்பு மருந்துடன் இனிப்புக் கலந்து சேர்த்து சமன்படுத்திக் கொடுத்து உடல் நோயை நீக்கி அருள் புரிவார். அதுபோல, எந்தத் திசையிலிருந்து கேட்டாலும் கேட்பவர் காதிற்குள் இன்பம் பெருகுமாறு நாம் விரும்பும் வண்ணம் சுவையாக ஆசிரியரும் தம் இன்மொழிகளால் அறங்களை சொல்லித் தந்து நல்வழி காட்டி நம்மை ஈடேற்றுவார்” என்கிறார் இப்பாடலாசிரியர். .

அக்காரம் - இனிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-20, 8:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே