நாலு பேர்
எதற்கும்
நாலு பேர்
வேணும்
என்பார்கள்
பொதுவாக...! !
நாலு பேரை
பார்த்து
நல்லது கெட்டதை
தெரிந்து கொள்
என்பார்கள்...! !
அவனிடம்
எந்த வம்பு தும்பும்
வச்சுக்காதே
அவன் நாலும்
தெரிந்தவன்
என்பார்கள்...! !
கடைசி காலத்துக்கு
நாலு பேரின்
உதவி வேணும்
என்பார்கள்...! !
இப்படி பலவிதமாக
நாலு என்ற எண்ணிற்கு
நாலாபுறமும்
மதிப்பு உண்டு...! !
--கோவை சுபா