புதுமைகள் புரியுதடி நெஞ்சில்

மாலையின் கவிதை பாடும் விழிகளும்
மௌனத்தின் கதைகள் சொல்லும் இதழ்களும்
காதலின் ராகங்கள் பாடிடும் தென்றலும்
புதுமைகள் புரியுதடி நெஞ்சில் !

மாலையின் பூங்கவிதை பாடும் விழிகளும்
மௌனக் கதையினைச் சொல்லும் இதழ்களும்
காதலின் ராகங்கள் பாடிடும்பூங் காற்றும்
புதுமைகள் செய்யுதுஞ் சில் !

------தூய வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-20, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே