கண்ணுக்கு தெரியாமல்
மாந்தரை படைத்த
மாயவனுக்கு பெரும்
மன உளைச்சல்—படைத்த
மனிதர்கள் அனைவருக்கும்
மனித நேயமும் ,
மற்றவர்களை மதிக்கும்
பண்பும் அறவே இல்லையாம்
காலமெல்லாம் உழைத்தும்
கரும்புள்ளி விழுந்ததென
கடவுள் கலங்கி நிற்கையிலே ,
ஆலயம் வருவோரெல்லாம்
அது வேண்டும் ,இது வேண்டுமென
தொல்லைகள் கொடுத்ததால்
பொறுக்க முடியாமல்
எவர் கண்ணிலும் படாமல்
எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள
எண்ணிய இறைவன்
எங்கேயோ சென்றுவிட—கோயிலிலுள்ள
தெய்வங்கள் கற்சிலையானது
கடவுளுக்குக் கவலையில்லை இப்போ
கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்