நீர் கவியா புலவரா
நீர் கவியா புலவரா
நேரிசை ஆசிரியப்பா
பாரதியின் கிறக்கம் தாசனாக் கியதால்
பாரதிதாச னெனமாறி யவர்கனக சுப்பு
பாட்டெழுதப் பெயரை மாற்றல் வேண்டுமா
யாரும் சூட்டாத பெயரை யேற்றாரே
பாரும் பாவலர் இலக்கணம் தெரிந்தவராம்
புலவரெனின் கதைக்க வேண்டும் கலவையாய்
கவியெனின் புவியார் ஐயம்தீர்த் திடவேண்டும்
கவியும் தன்முழுப் புராணம் சொல்லவேண்டும்
எவரும் எள்ளிடுமுன் இலக்கணம் படிக்கவேண்டும்
எதையும் அடிக்கடிப் புரட்டிடு
இன்றே புரட்டிடு தொடர்ந்து புரட்டிடே