காலை கனவு

அதிகாலையில்
என் கனவில் வந்து
என் தூக்கத்தை
கலைத்த காதலியே...! !

கலைந்து போன
தூக்கத்திற்கு
நான் கவலை
கொள்ளவில்லை...!

அதி காலை கனவு
பலிக்கும் என்பார்களே
அது நிஜம் தான் என்பதை
நிரூபிக்கும் வண்ணம்
நேரில் வந்து என்
ஏக்கத்தை தீர்ப்பாயோ...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Aug-20, 2:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaalai kanavu
பார்வை : 90

மேலே