கனவு நனவாகுமா

அன்று:
இதே சுடுகாட்டில்; இதே இடத்தில்;
தந்தையின் உடல்;
கொள்ளி வைத்தாள், தாய்.
காரணம்:
மருத்துவம் படித்தனர்
மகளும் மகனும் வெளிநாட்டில்.
மதுவும் மருந்தும் கலந்தகுடி;
பற்று வரவற்றதால் தற்கொலை,
எனறது ஊர்.
இன்று:
அதே சுடு காட்டில்;; அதே இடத்தில்;
தாயின் உடல்;
கொள்ளி வைத்தான், மகன்.
காரணம்:
புற்று நோய் வென்றது ;
போராடித்தோற்றனர்,
மருத்துவர்களும் மகனும்.
நிற்க:
பெற்றவர் கனவினை
மற்றுஅவர் மக்கள்
கற்று நனவாக்குவரோ - அன்றி
நீரினில் மூழ்கி
நினைப்பொழி வாரோ ?
என்று:
என்னாகும்
நால்வர் நினைவுகளே!
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (31-Aug-20, 2:09 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 65

மேலே