அவளும் ஐந்திணைகளும்

'மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


'காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


'வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


'கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


'மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:35 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 3337

மேலே