தற்கொலை தீர்வல்ல

நீ தற்கொலை செய்தால் ?????
அரசியல் ஆக்க படுவாய்
ஆயிரங்களில் கல்வியை
வாங்க முடியாத அனிதா போல
ஏளனம் செய்வர் உன் இறப்பை கூட
எதிரிகள் சுஷாந்த் சின் சிங் இறப்பை போல
கல்லறை வரை காசு பிடுங்கும்
கொடூர கூட்டத்தில் விட்டு செல்ல போகிறாய்
உன் அன்பு சொந்தங்களை
அனுதினமும் அவதியுற செய்ய
போகிறாய் அன்பு அன்னையை
கம்பிரம் கலைத்து கடைசிவரை
கவலையில் தள்ள போகிறாய் உன் தந்தையை.
வேண்டாம் நண்பா!!!
ஆயிரம் துன்பங்கள் என்றாலும்
அடுத்த நொடி வாழ வழி இல்லை என்றாலும்
ஆணித்தரமாய் முடிவெடு தற்கொலை தீர்வல்ல என்று..

எழுதியவர் : வேல் தங்கம் (11-Sep-20, 8:50 pm)
சேர்த்தது : வேல்ராஜ் R
பார்வை : 95

மேலே