மனம் வாட

எந்த துர் தீவினை செய்தேனோ
என் நிலை இன்று பெரும்பாடாய்
மனம் வாட சிலரை வார்த்தையாலும்
சினம் தணிய சிலரிடம் சினத்தாலும்
உறுமியிருப்பேனேயன்றி வேறில்லை

கைப்பலங்கொண்டு யாரையும் அடித்தறியேன்
கரடுமுரடான ஆயூதத்தால் மிரட்டறியேன்
குண்டர்களை ஏவியும் பழிசெய்யேன்
குலக்கேடான செயல்களை செய்தறியேன்
குணம் பல நாள் கெட்டு பேசியிருப்பேனோ

என்றைக்கும் ஏதோ ஒரு நிந்தனையே எனக்கு
எக்காரியம் செய்தாலும் குளறுபடியாய் முடிவு
ஆட்களின் சேர்க்கையும் ஆபத்தானதாகவே
அறம் செய்வோர் அருகாமை அணுகுதல் கடிதாய்
ஆயினும் வாழ்க்கை அடிமேல் அடி வைத்தே

கதிரின் உதிப்பிவிருந்து காரிருள் கவ்வும் வரை
கடுமையாக உழைத்து திரவியம் சேர்ப்பினும்
கரி எரிந்த சாம்பலாய் முடிவில் சேமிப்பு
அருமை மனைவியோடுடன் மக்கள் சோம்பியே
அச்சமும் சோகமும் சூழ்ந்தபடியே வாழ்க்கை நகர்வு

முற்பிறவி நம்பிக்கை குறைந்தவன் நான்
பாவ புண்ணிய பலங்கண்டு பிரமித்துள்ளேன்
பாதக செயல்களை பரிகாசத்திற்கும் செய்ததில்லை
பவித்திர செயலுக்காகவே என்றும் செயல்படுவேன்
பல பாடுபட்டேக்கொண்டே பஞ்சாய் பறக்கின்றேன்..
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Sep-20, 9:57 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : manam vaada
பார்வை : 28

மேலே