அப்பா அப்பா
அப்பா அப்பா
நீ எங்கே
தவிக்கிறேன் அழுகிறேன்
நீ எங்கே
முற்றம் இழுத்து
முத்தம் கொடுத்து
மிட்டாய் எடுத்து
மிதமாய் குறும்பு செய்யும்
அப்பா நீ எங்கே
என்னை வைத்து நீ தள்ளிய
நடைவண்டி ஊனமாய் போனது
நீ இல்லாமல்
உன் கைக்கடிகாரம் எடுத்து
நான் முத்தம் இடுகிறேன்
நீ இருந்த நேரங்களை எண்ணி
சுழற்சி முறையில்
உன் நினைவுகள் என்னை
சுற்றி சுற்றி வருகிறது அப்பா
உங்கள் வெள்ளை சட்டைப்பையில்
என் நினைவுகள் உறங்குகிறது
என் கருப்பு சட்டைப்பையில்
உங்கள் நினைவுகள் விழிக்கிறது
துக்கத்துடன் தூரமாய் நீங்கள்
இல்லாமல் நிற்கிறேன்
நீங்கள் தூரம் சென்ற பாதையை
பார்த்தவனாய் அப்பா...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி