மனித நேயமுள்ள பாடகன்
மனித நேயமுள்ள பாடகனே
ஆயிரம் நிலவில்
ஆரம்பித்து ஐம்பது
வருடங்களை கடந்து விட்டு
மூச்சு காற்றினால்
கவிதைக்கு அழகு சேர்த்து
எழுதிய கவிதையை
கலைகளாக்கி நவரசங்களை
நாவினில் வைத்து
தாய் மொழி தாண்டி
தமிழ் கவிதைகளுக்கு
பெருமை சேர்த்து
கண்ணீரில் நனைய
வைத்த பாடகனாய்
திரும்பி வருவேன்
உலகிற்கு அறிவித்து விட்டு
சென்றவன் சென்றவனாகி
விட்டாயே !