சுழியமே ஆதியாம்
சிவம் என்பது யாதென்று இன்று தெளிந்தேன்
சுழியம் என்பதின் மாற்றுச்சொல்லே சிவமாம்
கோள வடிவங்கொண்ட கோள்கள் யாவும்
சுழியத்தின் வடிவில் சுழலுங்கின்றனவேயாம்
கோள்களில் சிறந்த பூமி கோளில்தானே
கோடிக்கணக்கான நல் உயிர்கள் வாழும் என்றும்
நீரை சுமக்கும் காற்றின் உருவமும் கோளமேயாம்
எதை நாம் அண்டத்தில் உதிரச் செய்தாலும்
அதன் உருவம் மாறும் அழகு சுழியமாய்
உருளும் பொருள்கள் எவையும் கோளமாய் வேண்டும்
உயர்ந்த மரங்களும் நீள் உருளையாய் இருக்கும்
அழகு தலையும் கண்ணுங்கூட கோள வடிவத்தினிலே
அறிவியல் கண்டுபிடிப்புங்கூட எல்லாம் கோளமாகவே
சுழியத்தினுள்ளேயே பல சூழ்ச்சமம் உள்ளதைப்பார்
சுகம் வேண்டுமெனில் சுழியம் போற்று சூழல் மாறும்
- - - - - - - - - நன்னாடன்.