நீ உன் குடும்பத்துடன் என் சுற்றுலா பயணியாக 555

***நீ உன் குடும்பத்துடன் என் சுற்றுலா பயணியாக 555 ***


என்னுயிரே...


நீயும் நானும் பறந்து திரிந்த
நாட்களை மறந்துவிட்டாய்...

என்னையும் சேர்த்து...

என்னை மறந்த உன்னை
மறக்க தெரியவில்லை...

என்
வாழ்நாளில் உன்னை...

நான் எப்போதும்
சந்திக்க கூடாது...

நான் கோபத்தில்
எடுத்த முடிவல்ல...

மீண்டும்
உன்னை சந்தித்தால்...

அதை
தாங்கும் வலிமை...

என் இதயத்திற்கு
இருக்கா தெரியவில்லை...

நானும்
பறந்து செல்கிறேன்...

மண்ணைவிட்டு அல்ல
இந்த ஊரைவிட்டு மட்டுமே...

ஆண்டுகள் பல கடந்து
விதியும் சதி செய்தது...

நீ உன் குடும்பத்துடன்
என் சுற்றுலா பயணியாக...

நான் உன்
சுற்றுலா
வழிகாட்டியாக...

அவ்வப்போது
கண்ணீர் சிந்தும்...

என் கண்களுக்கு மட்டுமே
தெரியும் என் காதல்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (6-Oct-20, 4:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 345

மேலே