அவள்
அட்டமி திதி திங்கள் பிறைதானோ
பட்டு முகத்தாள் இவளின் நுதல்
பொட்டு அதில் நான்காணும் குங்குமம்
அதிலென்ன ஆழ பதிந்திருக்கும் மாணிக்கமோ
நேர்த்தியான மூக்கு அதன் கீழே
அன்றலர்ந்த தாமரையாய் அவள் அதரம்
அதில் காணும் அவள் சிரிப்பைக்
கண்டு நான் மகிழ அவள் மலர்விழிகள்
மலர்ந்து அபிநயித்து என்மனதை மயக்க
ஒன்றும் தெரியா பெண்போல என்னெதிரே
வந்து நின்றாள் அழகின் அழகாய்
அவள் மண்ணின் மேனகையாய்